Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
ஆழிப் பேரலையினால் இழப்புகளைச் சந்தித்த மக்களின் பொருளாதார நிலைமை 11 வருடங்களாகியும் மீளக் கட்டியெழுப்பப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோவில் -2 சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திடலில் சனிக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், '2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏற்பட்டிருந்த ஆழிப் பேரலையினால் எமது மக்கள் பாரிய அழிவைச் சந்தித்திருந்தனர். இதன்போது, பல இலட்சம் பேர் உயிரிழந்த அதேவேளை, அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் தொழில் நிலைகள், சொத்துகள் அழிவடைந்தன. இந்நிலையில், 11 வருடங்களாகியும் இம்மக்களின் பொருளாதாரம் மற்றும் பௌதிக வளங்கள் மீளக் கட்டியெழுப்பப்படவில்லை' என்றார்.
'ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கருத்திற்கொண்டு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago