Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்ற விடயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ளக்கூடாது என மாகாணக் கல்வி பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பணித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வியாழக்கிழமை மேலும் தெரிவிக்கையில்;
'கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி, தேசிய பாடசாலைகளிலிருந்து மாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் இணைப்பு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மத்திய கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் இணக்கமின்றி தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடயத்தில் வலயக் கல்விப பணிப்பாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. எனினும் இப்பாடசாலைகளில் மேற்பார்வை, கல்வி அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடலாம்.
அதேவேளை மாகாண பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்விச் செயலாளர் ஆகியோரின் அனுமதியின்றி கோட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் என்பன கல்வித் திணைக்களத்தினால் அங்கிகரிக்கப்படாத பொறுப்புகளை ஆசிரியர்களுக்கு வழங்கி வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவற்றையும் உடனடியாக நிறுத்தி, பாடசாலை ஆசிரியர்களை வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025