Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அறியப்படாத நபர்களின் பேரிலும் அனாமதேய முகநூல் அடையாளங்களாலும் சில அரசியல்வாதிகள் தமது விருப்பங்களையும் ஆசைகளையும் பதிவிட்டுவருகின்றனர். இவை உண்மைக்குப் புறம்பானவையாகவும் அனாகரிகமானதாகவும் அமைந்திருக்கின்றன தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெள்ளிக்கிழமை (04) அக்கரைப்பற்று தொடர்பில் 'ஹக்கீம் அதிரடி முடிவு; என பல்வேறு இணையத்தளங்களில் வெளியான செய்தியின் உண்மையான பின்புலத்தை தெளிவுபடுத்தவேண்டிய தேவை எனக்குள்ளது. அக்கரைப்பற்றின் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து அவசரமான நேரடிக் கண்காணிப்பினை மேட்கொள்ளவேண்டிய தேவையிருப்பதை மு.கா கட்சித் தலைமைக்கு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து,புதன்கிழமை(02) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அக்கரைப்பற்று கட்சி முக்கியஸ்தர்களுடனான தீவிர கலந்துரையாடல் ஒன்று கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
அக்கலந்துரையாடலில் நானும் கலந்திருந்தேன். அங்கு கலந்துகொண்ட கட்சி முக்கியஸ்தருள் சிலர் அக்கரைப்பற்றில் அரசியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது குறித்து பலதரப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை கேட்ட கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அக்கரைப்பற்றில் மத்தியகுழுவை விரிவாக்கம்செய்து அதனை வலுவூட்டி அமைப்பாளரின் தலைமையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் அமைப்பாளர் தலைமையில் கட்சியின் மத்தியகுழுவின் ஊடாகவே அக்கரைப்பற்றில் கட்சியின் அரசியலதிகாரம் செயற்படுத்தப்படவேண்டும் எனவும் கட்சித் தலைமை வலியுறுத்திக் கூறியது.
இம்மாத இறுதிக்குள் அக்கரைப்பற்றுப் புதுப்பள்ளியடியிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் கட்சி முக்கியஸ்தர்கள், சமூகநலன்விரும்பிகள் கட்சித் தலைவர் தலைமையில் ஒன்றுகூடி இருக்கின்ற மத்திய குழுவுடன் புதியவர்களையும் இணைத்து மத்திய குழுவினை அமைப்பாளர் தலைமையில் விரிவாக்கம்செய்து அதனிடம் அதிகாரம் அளிக்கப்படும் என்ற தீர்மானமும் அன்றைய தினம் எட்டப்பட்டது.
அத்துடன் அமைப்பாளருடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு வேண்டியே யு.எல்.ஆரிபீனுக்கு தலைவர் கூறினார்.
இந்நிலைமையில்இ குறித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முற்றிலும் முரண்பாடான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து இன்றைய தினம் கலந்துகொண்ட கட்சி முக்கியஸ்தர்கள் எவருமே இச்செய்திக்கு உரிமைகோரவில்லை என்றார்.
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
3 hours ago