2025 ஜூலை 05, சனிக்கிழமை

'இதய சுத்தியுடன் உழைக்க வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கியத்துக்கு இரு தரப்பு அரசியல்வாதிகளும் இதய சுத்தியுடன் உழைக்க வேண்டியிருப்பதாக கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

அண்மையில் கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கே.ஏகாம்பரத்தை வரவேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

'தமிழ், முஸ்லிம் உறவானது யுத்த காலத்துக்கு முன்பு இருந்தது போன்று மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். வீண் சந்தேகங்கள், முரண்பாடுகள் களையப்படுவதன் மூலமே அது சாத்தியமாகும்.

சமூகங்கள் பிரிந்திருப்பதற்கு அரசியல்வாதிகளும் காரணமாக இருக்கின்றனர். ஆகையினால் முதலில் அவர்கள் இதயசுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

எமது மாநகர சபையின் புதிய உறுப்பினராக பதவியேற்றுள்ள ஏகாம்பரம் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகின்ற ஒரு அரசியவாதி என்பதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் நல்லுறவைப் பேணி வருகின்றார். அவரது வரவு இப்பகுதி தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்துக்கு வழிகோலும் என நம்புகின்றேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .