Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இன பேதங்களை மறந்து சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் தெரிவித்தார்.
திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் அநேகமானவர்கள் அந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மிக நெருங்கிய உறவினர்களாகவே காணப்படுகின்றனர்.இது கடந்த கால சம்பவங்களின் விசாரணைகள் மூலம் தெளிவாகியுள்ளது.
இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு ஒரு தரப்பினரைச் சார்ந்ததல்ல.இதில் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரினதும் கடமையாக இருக்கின்றது.அந்தவகையில் சிறுவர்களின் பாதுகாப்பான சூழலை அமைத்து கொடுத்து அவர்களை ஒரு சில சமூகவிரோத நபர்களிடம் இருந்து பாதுகாப்பது எமது கடமையாகும்.
இந்த தேசிய ரீதியான செயற்பாட்டுக்கு நாம் இன பாகுபாடுகள் காட்டாமல், சிறுவர் சமூதாயத்தை பாதுகாக்க வேண்டும்.இதற்கு தகுதிதராதரமின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்க பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
49 minute ago