Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட பெரும் குற்றத்தடுப்பு பொலிஸாரின் உதவியுடன் கொழும்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி நேற்று (09) உத்தரவிட்டார்.
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி மேற்படி நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஆதரவாளரான இவர், வியாழக்கிழமை(08), தம்பிலுவிலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த காலங்களில் காணாமல்போனவர்களின் உறவுகள், தமது காணாமல்போன உறவுகள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் பலர் சாட்சியமளித்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, அம்பாறை மாவட்ட பெரும் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு விசாரணையை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தது.
இதனையடுத்து இனியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
3 hours ago