Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா
யூனானி மருந்துகளை தயாரிக்கும் இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய யூனானி மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் நேற்று சனிக்கிழமை இரவு அக்கரைப்பற்று ஆசியன் செப் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற யூனானி வைத்தியர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலம் கூறுகையில்,
யூனானி மருந்துகளை தயாரிக்கும் இயந்திரத்தை கொண்டுவருவதாக இருந்தால் கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்கும் பணம் போதாது. இதனை மத்திய அரசாங்கத்தினூடாக இணைந்துதான் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த இயந்திரத்தை பெற்றுத்தருவதற்காக நான் ஜனாதிபதியையோ அல்லது பிரதமரையோ சந்தித்தாவது இந்த இயந்திரத்தை பெற்றுத்தருவதற்கு என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் பின்தங்கிய ஆயுர்வேத வைத்தியசாலையை முன்னெற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துவருகின்றேன்.
அத்துடன் எமது நாட்டிலுள்ள எல்லா மாகாணங்களையும் விட ஒரு சிறந்து ஆயுர்வேத வைத்தியத்துறையை வழங்கும் ஒரு கிழக்கு மாகாணமாக மாற்றியமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றேன்.
யூனானி மருத்துவ சங்கத்தினால் இன்று முன்வைக்கப்பட்ட சகல தேவைகளையும் நான் நிறைவேற்றவுள்ளேன். நீங்கள் கடமையாற்றும் வைத்தியசாலைகளின் குறைகளையும் ஒரு வாரத்துக்குள் எழுத்து மூலமாகத் தர வேண்டும்.
அதில் மிக அவசரமாக தேவைப்படுகின்றவற்றை மிக விரைவில் செய்து தருவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
இதன்போது,கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் கருத்து தெரிவிக்கையில்,
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை சகல துறைகளிலும் பின்னிலையிலேயே காணப்படுகின்றது. இலங்கை மேற்பார்வை,மதிப்பீடுகளில் கூடிய அக்கறை செலுத்தாமையே இதற்கு பிரதான காரணமாகும். இதனாலேயே சிறந்த வெளியீடுகளை பெறமுடியாத நிலைமை காணப்படுகின்றது என்றார்.
இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹமட் நஸீர், மாகாண சபை உறுப்பினர் எ.எல்.தவம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுடீன் மற்றும் கல்முனை பிராந்திய யூனானி மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் எம்.ஏ.நபீல் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
2 hours ago