2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது நகரில் நேற்று வியாழக்கிழமை இரண்டு கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வளவொன்றில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது இந்தக் கைக்குண்டுகளை அவர்கள் கண்டுள்ளனர். இது பற்றி வளவு உரிமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.  

குறித்த இடத்துக்கு குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருடன் பொலிஸார் சென்றதுடன், குண்டுகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X