2025 ஜூலை 05, சனிக்கிழமை

'இழந்தவற்றை மீட்டெடுக்க காலம் கனிந்துள்ளது'

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் சமூகத்தின் கல்வியினை மேம்படுத்தி அதன் மூலமாக நாம் இழந்தவற்றை மீட்டு எடுப்பதற்கான செயற்பாடுகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.இதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலை அதிபர் ஏ.டி.ஜேமஸ் தலைமையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(26) மாலை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது கல்வி வளர்ச்சி ஏனைய சமூகத்தினருடன் நோக்கும் போது பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றது.இதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஆட்சியாளர்களுடன் பேரம் பேசும் பலம் பொருந்திய சக்தியாக காணப்படுகின்றது.

இதற்கு அமைவாக தமிழர்களுக்கான நல்லதொரு விடிவு காலம் மிக விரையில் மலரவுள்ளது என்றார்.

மேலும், நாம் தமிழ்த் தேசிய உணர்வு மிக்க மக்கள் சக்தியாக ஒற்றுமையுடன் திகழ்வதுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய, சர்வதேச ரீதியில் தமிழர்களின் உரிமைக் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .