2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

3 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாலமுனைப் பிரதேசத்தில் பழுதடைந்த உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும் 03 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி எ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

பாலமுனைப் பிரதேசத்திலுள்ள உணவகங்களில் இன்று புதன்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பழுதடைந்த உணவுகளை வைத்திருந்த மேற்படி உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த உணவுகளும்; கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சோறு, மாப்பொருளிலான உணவுப்பண்டங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சோறு உள்ளிட்டவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X