2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உணவு ஒவ்வாமையால் 43 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் 43 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

30 பேர் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையிலும்; 13 பேர் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக உணவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) பகல் உணவை  உட்கொண்ட மாணவர்களே சுகவீனம் அடைந்துள்ளனர்.

வாந்திஇ மயக்கம் போன்றவற்றுக்கு இவர்கள் உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் சிகிச்சை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X