2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

உலக சமாதான தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சஹாப்தீன்

உலக சமாதான தினத்தையொட்டி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் பிரதம அதிதியாகவும் நிந்தவூர் கோட்டக் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், ஆங்கிலக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.சத்தார், அதிபர் திருமதி என்.யூ.எச்.எம். சித்தீக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, உலக சமாதானத்தை வலியுறுத்தி நிந்தவூர் அஸ் - ஸபா வித்தியாலய மாணவர்களினால் ஊர்வலமொன்றும் நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X