2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

600 ஏக்கர் வேளாண்மை செய்கை பண்ண தீர்மானம்

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

பெரியநீலாவணை கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட மேட்டுவட்டை வட, கிழக்கு கண்டத்தில் 600 ஏக்கர் பிந்திய ஜலபோகத்திற்கான வேளாண்மை செய்கை பண்ணுவதற்கு ஆரம்பக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இவ் ஆரம்பக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.வினோதன் தலைமையில் பெரியநீலாவணை மகநலசேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

இதன் அடிப்படையில், வட்டிக்குளம், ஆழ்வங்குளம், கரைச்சைக்குளம், பள்ளவெளி அடங்கலாக 600 ஏக்கர் பிந்திய ஜலபோகத்தில்  மாசி மாதம் 20 திகதியில் இருந்து பங்குனி மாதம் 31 திகதிக்குள் விதைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கமநலசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X