Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
இன உறவினூடாக சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதே நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் என அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் சமூக வாழ்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப் பொருளில் பொருளாதரா அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று நாம் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற சமூகங்களின் ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் தங்களுடைய தொழில் மட்டும் நின்று விடாமல் இன உறவை வளர்த்து அதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பல இன்னல்களை சுமந்தவர்களாக வாழ்ந்து வந்துள்ளோம்.தற்போது இன விரிசல் இல்லாமல் ஒழிக்கப்பட்டு சகோதரர்களாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றோம். இவை என்றும் நிலைக்க வேண்டும்.
நாம் நிம்மதியாக வாழ்ந்தால் தான் எதிர்கால சமூகம் நிம்மதியாகவும் சுமுகமாகவும் வாழும். அதற்கான வழி வகைகளை இவ்வாறான செயலமர்வுகள் மூலம் பின்பற்றி நடக்க வேண்டும் என்றார்.
21 minute ago
27 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
44 minute ago
1 hours ago