2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு இலக்கு இருக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்குத் தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் மூலமே உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும். அதற்கு கல்வி மிகமுக்கியமானதாகும் என வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரீட் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலை வி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தில் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  எழுகதிர் எனும் மலரை வெளியீட்டு வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நான் சிறுவனாக இருக்கும்போது வறுமை காரணமாக நான்காம் வகுப்புக்கு மேல் என்னால்  படிக்க முடியவில்லை. நான் தீர்மானித்தேன், படிக்க முடியாவிட்டாலும் கூலித் தொழில் செய்தாவது முன்னேற வேண்டும் என்று. அப்போதே கச்சான் கொட்டை விற்பதில் இருந்து எனது தொழிலை ஆரம்பித்தேன்.இன்று இறைவன் உதவியால் எல்லா வசதி வாய்ப்புக்களும் கிடைத்துள்ளன.

மாணவர்களே, பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வைக்கின்றார்கள். அவர்களிடம் நமது பிள்ளை சித்தி பெற வேண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நீங்கள் வீணாக்கி விடாதீர்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X