2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கடின உழைப்பின் மூலம்தான் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட முடிந்துள்ளது'

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கடின உழைப்பின் மூலமும் சக்தி விரயத்தின் மூலமும்தான் நாங்கள் அனைவரும் சாந்தி சமாதானத்துடன் ஒற்றுமையாக ஒரே சமூகமாக ஒரே இடத்தில் ஒன்று கூட முடிந்துள்ளது என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் டீ.கே.எல். ரணவீர தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழு உத்தியோகத்தர்களாகப் பணியாற்றுபவர்களுக்கும் ஆலோசகர்களாகப் பணியாற்றுபவர்களுக்கும் அவர்களது சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(09) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யூ.எம்.ஹப்பார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில்,

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் சம்பந்தமாக அவர்களுக்கு உந்துதலை வழங்குவதற்காகவே நாங்கள் இன்று இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சேவையின் காரணமாக கிராமங்களும் குடும்பங்களும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்பட்டு நாங்கள் அனைவரும் சமாதானமான முறையில் வாழ்ந்துவருகின்றோம்.

இப்போது நாட்டில் பயங்கரவாதம்  இல்லை. ஆயுதங்களுடன் வந்து அச்சுறுத்தும் நிலை இப்போது இல்லை. இதற்குப்பதிலாக இப்போது எல்லோரும் ஒன்றுபட்டு கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கின்ற நிலை தோன்றியிருக்கின்றது.

சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு அன்று இருந்த பொறுப்புக்கள் கடமைகளும் வேறு இன்று இருக்கின்ற பொறுப்புக்களும் கடமைகளும் வேறு. இப்போது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற  பிரச்சினைகள் என்ன என்பதை இனங்காண வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் நமது பிள்ளைகள், தாய்மார்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்ன என்று இனங்காண வேண்டும்.பயங்கரவாதம் இல்லாவிட்டாலும் இன்று சிறுவர்களும் பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்றனர்.

அதே போன்று விபத்துக்கள் இல்லாத நாட்களே இல்லை. நீண்ட காலம் வாழவேண்டிய இளைஞர்கள் குறுகிய காலத்துக்குள் மரணிக்கின்றனர் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் பயனித்து பலர் உயிரிளக்கின்றனர்.இவற்றில் இருந்து எங்களது பிள்ளைக் காப்பற்ற வேண்டும்.இவ்விடயம் பற்றி சிவில் பாதுகாப்புக் குழுக்கள்  சிந்திக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X