2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபையில் முகப்பு அலுவலகச் சேவை

Suganthini Ratnam   / 2016 மே 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

புதிதாக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள  முகப்பு அலுவலகச் சேவையானது கல்முனை மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தங்களின் தேவைகளுக்காக அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுவதை தவிர்த்து, அவர்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை வழங்கும் நோக்கில் முகப்பு அலுவலகச் சேவையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த அலுவலக வரவேற்பு பகுதியிலேயே பொதுமக்கள் சேவைகளை பெற முடியும்.

எனவே, கல்முனை மாநகர சபையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சேவையின் மூலம் மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர்களிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகளை எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சேவைகளை பெற முடியும் என அம்மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் இரண்டரை இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன், தமது மாநகர சபையின் இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியுமாக மொத்தம் ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் இந்தச் சேவைக்கான முகப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X