2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகளின் தாக்குதலால் பலர் உயிர் இழந்துள்ளனர். இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுத்து, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண  மக்களை காப்பாற்ற ஆவண செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பில்,அவர்  வனவளத்துறை அமைச்சர் ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக  கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் பலமுறை முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் உங்கயிடமும் கதைத்துள்ளேன்.

இப்போது வழக்கத்துக்கு மாறாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருப்பதோடு, பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பலரின் வீடு சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் விடுவோமேயானால். மட்டக்களப்பு மற்றும்  அம்பாறை மாவட்டங்களில் எதிர்காலத்தில் ஏழை விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்திடமே உள்ளது. மக்கள் விரும்பும், மக்கள் நம்பும் ஒரு நல்லாட்சியாக இந்த நல்லாட்சி ஜொலிக்க வேண்டும் எனின் மக்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

எனவே, கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் அனுபவித்து வரும் காட்டு யானை அச்சுறுத்தலில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் முகமாக ஆரம்ப கட்ட நடவடிக்கையாக குறிப்பிட்ட பிரதேசங்களில் மின்சார வேலிகள் அமைக்குமாறும் பின்னர் நிரந்தர தீர்வாக அப்பிரதேசங்களுக்கு நீண்ட கால நிரந்தர பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,அமைச்சர் காமினி விக்ரம பெரேரா மிக விரைவில் பிரதி அமைச்சருடன் அந்த பிரதேசக்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .