Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாமலுள்ள காணிப்; பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மாகாண சபையும் அமைச்சர்களும் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அம்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபை அமர்வு அதன் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது, மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், தொட்டாச்சினிங்கி வெட்டை விவசாயக் காணிகளை உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்த உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு எந்தக் காலத்தில் தீர்வு காணப்பட்டது என்று கிழக்கு மாகாண மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். எனவே கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சினைகளை அவசர நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண சபை முன்வரவேண்டும்.
எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகிவரும் இக்காலகட்டத்தில் மாகாண காணி அமைச்சுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்.
மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்று பிரித்து நமது கிழக்கு மாகாண மக்களின் காணிப்பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்யாமல் கிழக்கு மாகாணத்தில் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பான சரியான புள்ளிவிவரங்களுடன் கிழக்கு மாகாண காணி அமைச்சு திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை தீர்க்கப்பட்ட காணிப் பிரச்சினைகள், தற்போது தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணதாதில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டு காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கு முயற்;சி செய்வதன் ஊடாக கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும். தற்போது நாம் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் இறுதிக்கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம்.
அடுத்த வருட முற்பகுதியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண சபையிலே அதிகாரத்திலிருக்கும் அமைச்சர்கள் உச்ச அதிகாரத்தினைப் பயன்படுத்தி மக்களுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும் .
குறிப்பாக கிழக்கு மாகாண மக்களினுடைய பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளால் சபையில் சமர்ப்பிக்கின்ற போது துறை சார்ந்த அமைச்சர்கள் சபையில் இருந்து அவ்விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுகின்ற போது துறைசார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாமை கவலையான விடயமாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago