Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கைத்தொழில் முயற்சியாளர்களும் தங்களின் நிறுவனங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அரிசி ஆலை, மர ஆலை, நெசவுத் தொழிற்சாலைகள், ஐஸ் உற்பத்திச்சாலைகள், குடிபான உற்பத்திச்சாலைகள் மற்றும் பால் சார் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் அம்பாறை மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஜோதிராஜா, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகங்களுடன் உற்பத்தியாளர்களை இணைத்தல், தொழில் முயற்சியாளர்களின் நிதிப் பிரச்சினை தொடர்பில் நிதி நிறுவனங்களுக்கு எடுத்துரைத்தல், முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல், கைத்தொழிலாளர்களின் நிலைத்திருக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இப்பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு நடவடிக்கைக்காக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. இது தொடர்பான மேலதிக விவரங்களை அம்பாறை மாவட்டச் செயலக வீதியில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் காரியாலயத்தில் பெற முடியும். அல்லது 063 -2222405, 075 -2610770 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .