2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'குறைகளை நிவர்த்திப்பேன்'

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளார்.

இன்று புதன்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறிய மாநகர முதல்வர், அவற்றை நிறைவு செய்வதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் குறித்த குறைபாடுகளையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு வேண்டிய பணிப்புரைகளை தாம் அதிகாரிகளுக்கு விடுப்பதாகவும் மேலதிக நடவடிக்கைகளை தாம் முன்னின்று மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றம் பொறியியலாளர் ரி.சர்வானந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X