Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அக்கரைப்பற்று பிரதேச சபையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்றகான நடவடிக்கையினை முதலமைச்சர் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையினால் துரிதமாக மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செய்னுலாப்பதீன் நஸீர் அஹமட் உறுதியளித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவத்தின் அழைப்பின் பேரில் நேற்று புதன்கிழமை மாலைஅக்கரைப்பற்று பிரதேச சபைக்கு விஜயம் செய்து பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.சலீம் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட பள்ளிக் குடியிருப்பு, பட்டியடிப் பிட்டி போன்ற கிராமங்களை உள்ளடக்கியதாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புதிதாக உருவாக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச சபையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஆளனி பற்றாக்குறை மற்றும் பிரதேச சபை கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்தை சுற்றிவர சுற்று மதில் நிர்மாணித்தல், புதிய சந்தைக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதிக்கீடு செய்தல்,திண்மக் கழிவுகளை சேகரிப்பதற்கான நிலையான பொருத்தமான இடம் ஒன்றை தெரிவு செய்தல் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி போன்ற அவசரமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துக் கூறிய பிரதேச சபையின் செயலாளர் அவற்றை நிறைவு செய்வதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் குறித்த குறைபாடுகளையும் தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு வேண்டிய பணிப்புரைகளை தாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுப்பதாகவும் தேவை ஏற்படின் இந்தப் பிரதேசத்தின் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மாகாண அமைச்சரின் ஒத்துழைப்புடன் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்னாலான முழு உதவிகளையும் மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்சாத், அக்கரைப்பற்று பிரதே செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.சலீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக முதலமைச்சருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Oct 2025
01 Oct 2025