Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்குக்கு கிழக்கினுடைய தலைமைத்துவம் வேண்டும் என்ற கோஷம் தற்போது வலுப்பெற்று வருகின்றது. இதனை மக்கள் விளங்குவதற்கு 16 வருடங்கள் கடந்துள்ளன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்; இப்போதே இதனைப் புரிந்துள்ளனர்; என்பது கவலைக்குரிய விடயமாகும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள்; அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சனிக்கிழமை (17) இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் அதன் முதலமைச்சரினால் பிரகடனப்படுத்தும்போது, கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டும் என்று ஏன் கிழக்கு மாகாண் முதலமைச்சரினால் பிரகடனம் செய்ய முடியவில்லை?
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வருவதற்கான கோஷத்துக்கு தேசிய காங்கிரஸ் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டு ஆதரவு வழங்கினோம்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் காட்டிய வழியிலிருந்தும் அதன் கொள்கையிலிருந்தும் அந்தக் கட்சி எப்போதே மாறிச் சென்றுள்ளது.
பொதுபல சேனா ஏன் முஸ்லிம்களில் மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும்? வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு ஏன் பொது பல சேனா மௌனம் காக்க வேண்டும்?
நாட்டின் அரசியல் என்பதும் கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை என்பதும் சர்வதேசத்துடன் பின்னிப்பிணைந்த பிரச்சினையாகவுள்ளது. இலங்கை -இந்திய ஒப்பந்தமும் திருகோணமலைக்கான ஒரு விடயமாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .