Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாண சபைக்கு இவ்வருடம் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சுமார் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தாறூல் இல்ம், மினாரா, ஜாயிஸா மற்றும் தெற்கு பாத்திமா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிய வகுப்பறை கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த ஆட்சிக் காலங்களில் கிழக்கு மாகாண சபைக்கு 400 கோடி ரூபாய் மட்டுமே வருடாந்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைகளுக்கு கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை திறந்த மனதுடன் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் அபிவிருத்தி திட்டங்களை முன்கொண்டு செல்கின்றது.
கிழக்கு மாகாண சபை சகலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய சபையாக மாறியுள்ளது. நாட்டிலுள்ள மாகாண சபைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இவை திகழ்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை செய்து வருகின்றது. இதனை மேலும் வழுவூட்டுவதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை.
கிழக்கு மாகாணத்தில் 03 மாவட்டங்களிலும் பாரிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவி இளைஞர், யுவதிகளின் தொழிலில்லா பிரச்சினைக்கு 2017ஆம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படவுள்ளது.
அத்துடன், சுற்றுலா வலயங்களையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சிறந்த செயற்பாட்டினை உணர்ந்த சர்வதேச நிறுவனங்கள் இம் மாகாணத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளது'; என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .