Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த எம்.ஐ.எம்.மன்சூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் திகாமடுல்ல மாவட்டத்தில் அடுத்த நிலையில் இருந்த சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.எல்.எம்.மாஹிர் புதிய உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்
சம்மாந்துறையில் அண்மையில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரகடனம் செய்ததுடன், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கண்டியில் நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டார்.
இதனைடிப்படையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டு பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago