2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'கிழக்கில் 3 கைத்தொழில் பேட்டைகளை அமைக்கத் திட்டம்'

Niroshini   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளினுடைய தொழில் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டும் இன நல்லுறவை பேணும் வகையிலும் எதிர்காலத்தில், வாழைச்சேனை கடதாசி ஆலையை  கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதே கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் தலைவரும் வாழைச்சேனை காகித ஆலையின் இணைப்பதிகாரியுமான எம்.ஜே.எம்.அன்வர் நௌசாட் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பு புதன்கிழமை (13) எம்.ஐ.எம்.கியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை தைக்காநகரில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் தொழில் பேட்டைகளை அமைக்கும் பாரிய திட்டத்தினை எமது தலைமை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பிட்ட 3 மாவட்டங்களிலும் தொழில் வாய்ப்புக்களின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளினுடைய தொழில் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டே இத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X