Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
குரோதப் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாடாகும் என சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரவை உறுப்பினருமான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.
இது குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 'விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறைவடைந்து தற்போதைக்கு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தம் காரணமாக தமிழ் பேசும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இனக்குரோத கருத்துக்களை வெளியிடும் இவ்வாறான அமைப்புகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அடிப்படைவாதிகள் மற்றும் மதவாதிகளின் அழுத்தம் காரணமாக அதனை வாபஸ் பெற்று நல்லாட்சி அரசாங்கமும் தனது கோழைத்தனத்தை பறைசாற்றியுள்ளது.
எதிர்காலம் குறித்து எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாது போயினும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் எந்தவொரு அடக்குமுறை அல்லது அதற்குத் துணை நிற்கும் சக்திகளுக்கு எதிராகவும் நாங்கள் மீண்டுமொரு ஜனநாயக ரீதியாக அணிதிரளத் தயங்கமாட்டோம்.
எதிர்காலத்திலும் நல்லாட்சி என்ற பெயரளவிலான ஆட்சி தொடரவும் உங்களுடைய வரப்பிரசாதங்களை தக்கவைத்துக் கொள்ளவும் உண்மையாகவே அக்கறை இருக்குமானால், அதற்கான குறைந்த பட்ச நன்றிக்கடனாகவேனும் உங்களை அரியணையில் அமர்த்திய தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தனும்' என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago