2025 மே 22, வியாழக்கிழமை

'68 சதவீதமான மரணங்கள் தொற்றாத நோயினால் ஏற்படுகின்றன'

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இலங்கையில் ஏற்படுகின்ற 65 வயதுக்குட்பட்ட மரணங்களில் 68 சதவீதமான மரணங்கள் தொற்றாத நோய்களான நீரழிவு நோய்,உயர் குருதியமுக்கம் போன்ற நோய்களால் மரணங்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க வேண்டுமென்றால் தேகாரோக்கிய பயிற்சிகளை நாம் அனைவரும் நாளாந்த கடமையாக முன்னெடுக்க வேண்டுமென திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை அலுவக ஊழியர்களுக்கான வீதி நடைபயிற்சி மற்றும் தேகாரோக்கிய பயிற்சிகளை நிறைவு செய்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் தற்போது 80 வயது வரை ஆயுட்காலமாக கணிப்பீடப்பட்டுள்ள போதும்,எம்மவரிடம் காணப்படுகின்ற உணவுப் பழக்கமுறைகளும் தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக அமைந்துள்ளன.

நாம் மூன்று வேளை உணவாக சோறு உட்கொள்ளுதல்,முறையற்ற விதத்தில் உணவுகளை உட்கொள்ளல்,நேரத்துக்கு உணவு எடுக்காமை மற்றும் முறையான தேகாரோக்கிய பயிற்சிகள் மேற்கொள்ளாமை போன்ற முறையற்ற செயற்பாடுகள் காரணமாக, தொற்றாத நோய்கள் காவிக் கொள்கின்றன.

இதனை தடுத்து மக்களை ஆரோக்கியமான பிரஜைகளாக வாழ்கின்ற காலத்தை மகிழ்ச்சி கொண்ட நாட்களாக மாற்றியமைக்கும் நோக்கில் இன்று அரசாங்கம் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் அனுஷ்டிக்கப்பட்டுகின்றது. இதனை ஒருவாரம் மாத்திரம் செய்து விட்டு இருப்பதனால் எந்த நன்மையும் கிடைக்காது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X