Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாண வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கென்றொரு சரியான அரசியல் தலைமையினை உருவாக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) பாடசாலை அதிபர் ஏ. ஹாறுடீன் தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் ஆதரவினைப்பெற்று இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் என மார்தட்டிக்கொள்வோர் அம்மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் சிறிதளவேனும் அக்கரை செலுத்தவில்லை.
ஆனால், அவர்கள் தங்களுக்கென பெறுமதியான அமைச்சுக்களையும் பதவிகளையும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களே தவிர, இன்னும் எமது சமூகத்தின் தேவைகளை பற்றி சிந்தித்த வரலாறுகள் கிடையாது. இதனை கிழக்கில் வாழுகின்ற கல்விமான்களும் புத்திஜீவிகளும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
நாட்டில் அமையப்பெற்றுள்ள நல்லாட்சியில் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் எமது சமூகத்துக்காக எதனைப்பெற்றுக்கொடுத்தார்கள் என்று பார்க்கின்றபோது ஒன்றுமேயில்லை.
இன்று இம்மாகாணத்தில் பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.குறிப்பாக கல்வி தொடர்பான பிரச்சினைகளைப் பார்க்கின்றபோது பின்தங்கிய பிரதேசத்திலுள்ள ஏழை மக்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதனையிட்டு மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய கல்வி விடயத்தில் எமது தலைமைகள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.
இருந்தாலும் பின்தங்கிய இலுக்குச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலை பல அடிப்படை தேவைகளுடன் இயங்கி வருகின்றது. இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு கல்விகற்கின்ற மாணவர்களாகிய நீங்கள் வறுமையின் காரணமாக கல்வியை விட்டு தூரமாகிவிடக்கூடாது. வரலாறுகளைப் புரட்டிப்பார்க்கின்றபோது, ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களே கல்வித்துறையில் சாதனையாளர்களாகவும் உயரதிகாரிகளாகவும் அரசியல் தலைவர்களாகவும் புத்திசாலிகளாகவும் சிறந்து விளங்குகின்றனர்.
நான் எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் ஏழைகளின் கல்விக்கு உதவும் நோக்குடனே எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் தளபாடங்களை வழங்கியுள்ளேன். ஏதிர்காலத்திலும் எனது நிதியினூடாக இப்பாடசாலைக்கு தேவையான உதவிகளை செய்து தருவேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago