2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சோகங்களுக்கு அரசியல்வாதிகளே காரணம்'

Niroshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
 
இந்த நாட்டில் ஏற்பட்ட சோகங்களுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டினுடைய அரசியல்வாதிகள்தான். இந்த நாட்டின் மக்களைப் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை முக்கியப்படுத்தியதன் காரணமாக நாங்கள் போருக்கு முகங்கொடுக்க நேரிட்டது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை, டெம்பிட்டிய மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(02) இடம்பெற்ற கிழக்கு மாகாண மீனவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகளின் குடும்ப கல்வி நிலையினை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாகாண விவசாய அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் இப்போது நல்லாட்சியை அமைத்திருக்கின்றோம்.

இந்த நாட்டில் தமிழ், சிங்கள மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மொழிப் பரிமாற்றல் இல்லாமையே ஆகும்.

இருந்த போதிலும் இனிவரும் காலங்களில் இவை நிவர்த்தி செய்யப்படும் சூழல் தோன்றியுள்ளது. பிறக்கும் புத்தாண்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்திட்டம் ஜனவரி 09ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த ஏற்பாட்டின் படி ஒரு சிறந்த அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டின் சகல இனங்களும் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லக் கூடிய நிலை ஏற்படும். அவ்வாறு இடம்பெறும் போது நாம் அனைவரும் நெருக்கமாக வாழ முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X