Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.எ.காதர்
இந்த நாட்டின் வரலாறு, சுபீட்சம், ஆட்சி, நிர்வாகம் அனைத்திலும் முஸ்லிம்களுக்குப் பங்குண்டு. சுதந்திரத்தைப் பொறுத்தரை வரலாற்றில் இந்தப் பாத்திரத்தை முஸ்லிம்கள் ஏற்றிருக்கின்றார்கள் என தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசறிவியல்த்துறை விரிவுரையாளர்.எம்.எம்.பாஸில் தெரிவித்தார்.
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை மருதமுனையில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முஸ்லிம்கள் எப்போதுமே நாட்டின் நலனோடு மோதிக் கொள்ளவில்லை என்பதனையே வற்புறுத்தினார். இது முஸ்லிம் தலைவர்களின் பங்கும் செயற்பாடும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நாட்டின் விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் இப்படித்தான் செயற்பட்டுள்ளார்கள். இலங்கையின் சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களுக்குப் பெரும் பங்குண்டு' என்றார்.
'68ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்கான முஸ்தீபுகள் ஒருபுறமிருக்க காணாமற் போனவர்களின் கதைகள் ஒருபுறம், விடுவிக்கப்படாத பூமிகளின் செய்திகள் ஒருபுறம், அரசியற் கைதிகளின் ஓலம் இன்னொருபுறம். ஒற்றையா? சமஷ்டியா? என்ற அச்சம் மறுபுறம். பொது பல சேனாவின் மூர்க்கமான பிரச்சாரங்கள் இன்னுமொருபுறம். சிங்க லே வாதம் மறுபுறம். எல்லாமாக இருக்க என்ன மொழியில் சுதந்திர கீதத்தை நாம் பாடுவது என்பது கூடத் தெரியாத மக்களாக நாம் மாறியிருக்கின்றோம்.
நாம் இப்போது 68ஆவது சுதந்திர நினைவினைக் கொண்டாட வந்து விட்டோம். எமக்குள் இன்னும் சாதி ஒழியவில்லை., மொழி ஒழியவில்லை, மதம் ஒழியவில்லை, பிரதேசம் வாதம் ஒழியவில்லை. எப்படி நாம் சுதந்திரத்தை அனுபவிப்பது?
இன்னும் வாயை ஆவெனப் பிளந்து சுதந்திரத்துக்காகக் காத்திருக்கும் பொதுசனங்களாகவே நாம் இருக்கிறோம். இலங்கையருக்கு கிடைக்கின்ற பொது நன்மை சுதந்திரத்தின் பெயராலான மறுவாழ்வே ஆகும். அந்த வாழ்விலாவது உண்மையான பொது நன்மையை அனுபவிக்க நாம் கொடுத்து வைக்க வேண்டும'; என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
39 minute ago
1 hours ago