Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தில் வெளிவாரிக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜு{ன் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கணக்கியல் நிதி முகாமைத்துவ உயர் டிப்ளோமாக் கற்கைநெறியல் இரண்டு பேரும் உளவளத்துறை தொழில்சார் டிப்ளோமாக் கற்கைநெறியில் 130 பேரும் ஆங்கிலமொழி டிப்ளோமாக் கற்கைநெறியில் 79 பேரும் ஆங்கிலச் சான்றிதழ் கற்கைநெறியில் 104 பேரும் கணினிப் பிரயோகச் சான்றிதழ் கற்கைநெறியில் 45 பேருமாக மொத்தம் 360 பேர் சான்றிதழ்கள் பெறவுள்ளனர்.
இவர்களுக்கு தனித்தனியாக விழாத் தொடர்பான படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரையில் இப்படிவங்கள் கிடைக்காதோர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னராக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தின் உதவிப் பதிவாளருடன் 0672052801 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
26 minute ago
29 minute ago