2025 ஜூலை 16, புதன்கிழமை

'சோபர் கழகம் பல இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்னகத்தே வைத்துள்ளது'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம் பல சாதனை வீரர்களையும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரையும் தன்னகதே வைத்துள்ள பெருமை அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகத்துக்குள்ளது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் தெரிவித்தார்.

கழகத்தின் தலைவரும் தொழிலதிபருமான யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் கழக வீரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நேற்று(13) இரவு மீலாத்நகர் அல் ஜெஸீறா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடத்தப்படுகின்ற பிரதேச விளையாட்டுப்போட்டிகளில் கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியாக சம்பியம் பட்டத்தை சுவிகரித்துள்ளது. இந்தப் பெருமை கிழக்கு மாகாணத்திலுள்ள எந்த கழகங்களுக்குமில்லை என்றுதான் கூறலாம். அந்தளவுக்கு மிகத்திறமை வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களைக்கொண்டு இக்கழக வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டும் வருகின்றன.

இக்கழகத்திலுள்ள வீரர்கள் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட, தேசிய மட்ட ரீதியில் பல சாதனைகளை படைத்து இக்கழகத்துக்கும் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கும் தேசிய ரீதியில் நற்பெயரினை பெற்றுக்கொடுத்துள்ளனர். இப்பெருமையில் எனக்கும் பாரியபங்குண்டு.

இக்கழகத்தின் வளர்ச்சிக்காக எனது இவ்வருட நிதியிலிருந்து 60 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

சோபர் விளையாட்டுக் கழகம் விளையாட்டில் மாத்திரமல்லாமல் சமூக சேவைகளிலும் அரசியலிலும் மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் தவறுகளை தட்டிக்கேட்கும் ஒரு சிறந்த கழகமாகவுள்ளதால் இக்கழகத்தின் செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிலர் மக்கள் மத்தியில் ஒரு அடாவடிக் கழகமாகமாக பேசவைத்து வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூன், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X