2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சுபையிரை ஓரங்கட்டியமை பாரிய இழப்பு'

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

தனிநபரொருவரை திருப்தி படுத்துவதற்காக கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபையிரை கட்சியை விட்டு ஓரங்கட்டியமையானது  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும் என அக் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ.ஹமீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து செயற்பட்டவராகவிருந்தால் அது கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் ஆவார்.

அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் வளர்ச்சிக்காக தலைமையோடும் என்னோடும் விசுவாசமாக இருந்து அவருக்கு கட்சி வழங்கிய பதவியை கொண்டு மூவின மக்களுக்கும் பணி செய்து திறம்பட செயற்பட்டதுடன் அவரது சொந்த பொருளாதரத்தினையும்  கட்சிக்காக செலவு செய்தமையையும் எவராலும் மறுத்துவிட முடியாது.

அப்படியான ஒருவர் எவ்வித தவறுகளையும் செய்யாத சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டதில் தனிநபர் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அம்மாவட்டத்தில் ஒருவருக்கு மாத்திரம் அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் கட்சியின் தலைமை துணைபோய் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரயை ஓரங்கட்டியமை கவலையான விடயமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X