Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 10 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா,பி.எம்.எம்.ஏ.காதர்
சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றம் ஸ்தாபிக்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்புமாறு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அம்மன்றத் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பார், செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் ஆகியோர் கையொப்பமிட்டு, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலத் தேவையாக உள்ள தனியான உள்ளூராட்சிமன்றக் கோரிக்கையின் நியாயத்தை தெளிவுபடுத்தி சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் மிகவும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவந்த போராட்டத்தின் பிரதிபலிப்பாக அக்கோரிக்கை அரசியல் தலைமைகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கல்முனைத் தொகுதியில் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற விவகாரம் சூடுபிடித்திருந்தது. நீங்களும் அது குறித்து பேசியிருந்தீர்கள். கல்முனை நகரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றம் ஸ்தாபிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டத்தில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, பிரதமர் வழங்கிய வாக்குறுதி இதுவரையில்; நிறைவேற்றப்படாமல் உள்ளமை தொடர்பில் தாங்கள் நாடாளுமன்றத்தில்; அவரிடம் கேள்வி தொடுத்து விசேட கவனயீர்ப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago