2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'சாய்ந்தமருது பிரதேச சபை, தோப்பூர் பிரதேச செயலகம் ஏற்படுத்தப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முகம்மட் புஹாரி

சாய்ந்தமருது பிரதேச சபை, தோப்பூர் பிரதேச செயலகம் ஆகியன புதிய வருடத்தினுள் அப்பிரதேச மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிடப்பில் போடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளாக அல்லாமல் புதிய வருடத்தில் அப்பிரதேச போராளிகள், கட்சியின் மத்திய குழுக்கள், அந்தத்தப் பிரதேச ஊர்த்தலைமைகள், கட்சியின் மாவட்டத் தலைமைகள் அழுத்தங்களை பிரயோகித்து இவைகளை வென்றெடுக்க முன் வரவேண்டுமெனவும் அவர் கூறினார்.

கண்டி, பொல்கொல்ல கூட்டுறவுச்சங்க மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (07) முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது  பேராளர் மாநாடு நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பாக தற்போது நாட்டில் வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ள இத்தருணத்தில், கட்சியினால் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் அப்பொறுப்புகளை சரிவர நிறைவேற்றவேண்டும்' என்றார்.

'உள்ளூராட்சித் தேர்தலொன்று புதிய முறையில் நடக்குமாக இருந்தால், நடந்திருக்கின்ற எல்லை நிர்ணயத்தின்படி எமது சமூகத்துக்கும் கட்சிக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையும். கட்சியையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே, பிராந்திய ரீதியாக செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டு எல்லை நிர்ணயம் தொடர்பான குறைபாடுகளை ஆவணங்களாக தயாரித்து இரு வாரத்தினுள் பிரேரணைகள் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .