2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சிறுவர்கள் உடல், உள, அறிவு ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். நாட்டிலுள்ள சகல தரப்பினரும் இவர்களைப் பாதுகாத்து, நாளைய உலகின் வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளரும் மாகாண சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ஏ.எல்.அமானுல்லா தெரிவித்தார்.

அம்பாறை, ஒலுவில் அல்- ஹிலால் முன்பள்ளி பாடசாலையின் 15ஆவது ஆண்டு விழாவும் வருடாந்த கலை விழாவும் அல்- ஹிலால் முன்பள்ளி பாடாசாலையின் தலைவர் யூ.கே. அப்துர்றகுமான் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு பிள்ளையின் கல்வியின் அடித்தளமாகவும் மெய்த்திறன் கூடிய மாணவர்களை உருவாக்கும் இடமாக முன்பள்ளி காணப்படுகின்றது.

முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்து எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் கல்வியின் கரிசிலணையுடன் செயற்பட வேண்டும்.அப்போது தான் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

சிறுவர்களின் பாதுகாப்பில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நாமும் சிறுவர்களின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X