2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சிறுவர் பாதுகாப்பு சட்ட விளக்கங்களை அறிந்திருக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான சட்ட விளக்கங்களை ஒவ்வொரு சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்;களும் அறிந்துவைத்திருக்க வேண்டுமென சட்டத்தரணி எம்.ஐ.உவைசுர் றஹ்மான் தெரிவித்தார்.

சமகாலத்தில் இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை எதிர்காலத்தில் எச்சந்தர்ப்பதிலும் இடம்பெறாது தடுப்பதற்கு சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முன்வர வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச அவலகங்களிலும் பணியாற்றுகின்ற பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்;தர்களுக்கான சட்ட பாதுகாப்பு பொறிமுறைக் கருத்தரங்கு, அம்பாறை கச்சேரி கணிணிப் பயிற்சி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்டத்தைச்; சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 22 பேர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X