Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
உலகத்தை ஆட்சி செய்தவர்கள் இன்று எத்தனையோ பேர் மரணித்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் செய்த சேவைகளையும் நல்லவைகளையும் நாம் வாழும் வரை நினைவு கூர்ந்து இன்றைய இளம் சந்ததியினர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். அப்போதுதான் அவர்களின் பெயர்கள் உலகம் அழியும் வரை மிளிர்ந்து கொண்டிருக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக வீரர்களையும் சமூக சேவையாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (30) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் எமது நாட்டுக்கும் மாகாணத்துக்கும் மாவட்டத்துக்கும் ஏன் எமது பிரதேசத்துக்கும் நல்ல பல சேவைகளை செய்துவிட்டு பலர் இறந்துவிடுகின்றனர். இன்னும் சிலர், தங்களின் சேவைகளை வெளிக்காட்டாமல் தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களை இன்றை இளம் சமூதாயங்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். அப்போது அவர்களின் சமூகப்பற்றுள்ள சேவைகளை வெளியுலகத்துக்கு எடுத்துக்காட்ட முடியும்.
அதுமாத்திரமல்லாமல், சமூகப்பற்றுடன் செயற்பட்டுவரும் அரசியல்வாதிகளும் அரச உயரதிகாரிகளும் என்றுமே சமூகத்தில் மதிக்கப்பட்டு, அவர்கள் வாழும் வரை வாழ்த்தப்பட்டவர்களாகவும் மரணித்த பின்னர் அவர்களின் சேவைகள் தொடர்ந்தும் ஆண்டாண்டுக் காலம் ஞாபகப்படுத்தப்பட்டு பேசப்பட வேண்டும் என்றார்.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago