2025 ஜூலை 05, சனிக்கிழமை

'ஜெமீல் கல்வித்துறையில் பெரும் பணியாற்றியுள்ளார்'

Niroshini   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் முஸ்லிம் சமுகத்துக்கு மட்டுமன்றி நாட்டில் வாழும் முழு சமூகத்தினருக்கும் கல்வித்துறையில் பெரும் பணியாற்றியுள்ளார் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில் அண்மையில் காலம் சென்ற பன்னூல் ஆசிரியரும் முஸ்லிம் சமய கலாசார விவகார முன்னாள் செயலாளருமான சாய்ந்தமருது எஸ்.எச்.எம். ஜமீலின் நினைவு தின உரையும் அவரின் ஆக்கங்கள், வாழ்க்கை நினைவுகள் பற்றிய கண்காட்சியும் நேற்று புதன்கிழமை (04) மாலை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இஸ்லாமியக் கற்கை அரபுமொழி பீடாதிபதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மர்ஹும் ஜெமீல் எமது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். அவரின் சேவையினால் இன்று நாட்டில் ஆயிரக்கணக்கான கல்வி அதிகாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

பண்பாட்டு ஆய்வாளராக திகழ்ந்த ஜெமீலின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் இடைவெளியை தோற்றுவித்துள்ளது.

ஜெமீல் ஒரு பன்முக ஆளுமை செயற்திறமையில் தொடர்ந்து தன்னை உறுதிப்படுத்தியவர்.அவரது இயல்பான திறமைகள் அவரைப் பல படித்தரங்களுக்கு உயர்த்தியுள்ளது என்றார்.

இதன்போது,பேராதனை பல்கலைக்கழக முன்னாள் மெய்யியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், அறிஞர் ஜமீல் பற்றிய நினைவுரையையும் அறிமுக உரையை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீனும் நிகழ்த்தினார்கள்.

அத்துடன், தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூல் நிலையத்தில் அறிஞர் ஜமீலின் ஞாபகார்த்த நூல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .