Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஊடகவியலாளர்களின் நலனில் நிறுவனங்கள், அக்கரை காட்டுவது அவர்களின் செயற்பாட்டுத் தன்மையை அதிகாரிக்க வழிவகுப்பதோடு அவர்களை ஊக்குவிப்பதும் பாதுகாப்பதும் காலத்தின் தேவையாகும் என அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் ஊடகவியலாளருமான தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தினால் ஊடகவியலாளர்களுக்கு சைட் பைகள் வழங்கும் நிகழ்வு, இன்று (29) மறுமலர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் தலைமையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
கடந்த காலங்கள் இல்லாதது போன்று இன்று ஊடகவியலாளர்கள் எந்தவிதமான கஷ்டங்களுமின்றி நிம்மதியாக தங்களது ஊடகச் செயற்பாட்டினை மேற்கொள்கின்றனர். ஆனால், ஊடகவியலாளர்களின் நலன்களில் அரசாங்கம் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
ஊடக செயற்பாட்டின் மூலம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை யாரும் மறக்க முடியாது. பல்வேறு விடயங்கள் ஊடகத்தின் ஊடாக உடனுக்குடன் எல்லோரும் அறிந்து கொள்கின்றனர். இதனால் பல மாற்றங்களும் நன்மைகளும் திருத்தங்களும் நடைபெறுகின்றன.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை ஏனைய நிறுவனங்களாலும் எங்களது அம்பாறை மாவட்ட சீட்ஸ் நிறுவனத்தாலும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago