2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தமிழர்களின் கல்வி, கலை, கலாசாரம் அழிக்கப்பட்டிருகிறது'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்தகால ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரம் என்பன திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டிருக்கின்றது. அதனை மீட்டெடுப்பதற்கு அனைவரும் முன் நின்று உழைக்க வேண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
பெரிய நீலாவணை கிராமிய பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம், நியூ ஸ்ரார் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முயற்சியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்தகால யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே தமிழ்ச் சமூகம் இருக்கின்றது. நாட்டின் அரசாங்கம் மாற்றம் பெற்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்திடம் எமது தேவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எமது கலை, கலாசாரம் என்பன எழுச்சி பெற வேண்டும். அதற்காக நாம் முழு மூச்சாகச் செயற்பட வேண்டும். அதற்காக என்னாலான பல உதவிகளைச் செய்யவுள்ளேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X