2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தற்போதைய அரசாங்கம் ஸ்தீரமற்றுள்ளதால் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

'தற்போதைய அரசாங்கம் ஸ்தீரமற்று காணப்படுவதால், மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என இங்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் 12ஆவது பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்று முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது ஏனைய சமூகத்தினர்களுக்காகவும் குரல் கொடுத்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது. மக்கள் எப்போதும் தேசிய காங்கிரஸின் பக்கமே இருக்கின்றார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில வங்குரோத்து அரசியல்வாதிகள் எம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். நாங்கள் மக்களின் மனதில் வாழ்கின்றோம்.

இன்று சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் பாதையை காட்ட முடியாமல் தடுமாறுகின்றது. மற்றைய சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு சில முஸ்லிம் தலைமைகள் செயற்படுவது கவலையழிக்கின்றது.   

கொடூர யுத்தத்தை ஒழித்து வடக்கு, கிழக்கை பிரிப்பதற்கு ஆணையிட்டது தேசிய காங்கிரஸ் கட்சியாகும்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X