Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'நமது சேவைகளும் தலைமைத்துவ பண்புகளுமே பிறர்; நம்மை பாராட்டுவதற்கு காரணமாக அமைகின்றது' என திருக்கோவில் கல்வி வலய பணிப்பாளர்; ஆர்;.சுகிர்;தராஜன் தெரிவித்தார்.
30 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் ஆசிரிய ஆலோசகர் பி.எ.கிறிஸ்றியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா மகாவித்தியாலயத்தில் நேற்று 5 , நடைபெற்றது.
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ரி.இராசநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;,
'திருக்கோவில் கல்வி வலயத்தை பொறுத்தமட்டில் ஆசிரிய ஆலோசகர்; ஒருவர் ஓய்வுபெறும் போது வலயத்தில் உள்ள அத்துறைசார்ந்த ஆசிரியர்கள் குழாமினால் வாழ்;த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்கு காரணம் அவரது சிறந்த சேவையும் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்த தலைமைத்துவ பண்புகளுமே ஆகும்.
ஆகவே இவரது சிறந்த பணியை அனைத்து கல்விபுலன் சார்;ந்தவர்களும் பின்பற்ற முயற்சிக்கவேண்டும் என்பதுடன் இவரது ஓய்வு கல்வி வலயத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இவ்வாறானதொரு சிறந்த நிகழ்வில் தான் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட அவர் இதனை முன்னின்று நடாத்திய ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுவதாகவும் கூறினார்.
நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரை பாராட்டி பாராட்டுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிகல்விப் பணிப்பாளர்கள் வி.குணாளன், வை.ஜெயச்சந்திரன், கணக்காளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago