2025 மே 19, திங்கட்கிழமை

'தேசிய காங்கிரஸ் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளது'

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.ஜி.ஏ.கபூர்

இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாற்றில் தேசிய காங்கிரஸ் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லாஅரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் உறுவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்று முஸ்லிம்களுக்கு மற்றுமல்லாது ஏனைய சமுகத்தினர்களுக்காகவும் குரல் கொடுத்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் இந் நாட்டில் சுதந்திரமாக வாழ முடியாது. பேரிரவாதிகளின் கைக்குள் சிக்கி வாழ வேணிடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசாறையில் வளர்க்கப்பட்ட நாங்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அவரால் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் தற்போது முஸ்லிம்களின் குரலாக ஒழித்துக் கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசில் வரலாற்றில் முஸ்லிம்கள் சமூகங்கள் ரீதியில் பல முன்மாதிரிகளை கடைப்பிடித்து சமூகங்களிடத்தில் பிரிவினை ஏற்படாவண்ணம் செயற்பட்டு வந்துள்ளார்கள்.

சாதனைகளை ஏற்படுத்தி அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளார்கள்.இலங்கையில் வாழும் சகல இன மக்களுடனும் முஸ்லிம்கள் பின்னிப் பினைந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

மக்கள் எப்போதும் தேசிய காங்கிரஸின் பக்கமே மக்கள் இருக்கின்றார்கள். இவர்களின் தேவைகளை அவ் அப்போது இனங்கண்டு கட்சி தனது பணியை முன்கொண்டு செல்கின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X