Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 31 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,அஸ்லம் எஸ்.மௌலானா
வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டு, சுயாட்சி முறையில் சமஷ்டிக் கட்டமைப்பை கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்றது. இக்கோரிக்கையானது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தை உடைத்தெறிந்து அநாதையாக்கும் வகையில் அமைந்துவிடுமென கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர்; எம்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'அண்மையில் காரைதீவு விபுலானாந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய த.தே.கூ.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முஸ்லிம்கள் கோரியுள்ள கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கப்;போவதில்லை. அம்மாவட்டம் தென்கிழக்கு அதிகார அலகாக உள்ளடக்கப்படுவதை நாம் எதிர்ப்போம். இதற்கு ஆதரவாக எமது அரசியல்வாதிகளனாலும், புத்திஜீவிகளனாலும் அவர்களை நாம் துரோகிகளாகப் பார்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்;ந்த தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனரெனத் தெரிவித்துள்ளார்;.
இக்கரையோர மாவட்டக் கோரிக்கையானது இன்று, நேற்று முன்வைக்கப்படும்; கோரிக்கையல்ல. 1977இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கென அமைக்கப்பட்ட மொறகொட ஆணைக்குழுவின் விதைப்புரையே கல்முனைக் கரையோர மாவட்டமாகும். அரசியலில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு இந்நீண்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை' என்றார்.
'பெரும்பான்மையினருடன்; சேர்ந்து வாழ முடியாதென்ற முடிவுக்கு வந்த தமிழர்கள், அம்பாறையில் சிங்களமொழி நிர்வாக மொழி நிர்வாகத்தின் கீழ் சேர்ந்திருக்க விரும்புவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
1958ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மட்டக்களப்புக்கு தெற்கே முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி பிரதேசமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தை மையப்படுத்தி தென்கிழக்கு அதிகார அலகு எனும் கோரிக்கையை மு.கா.வின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்வைத்தார். இதனை விளங்கிக்கொள்ள மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இதற்கு எதிராக தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி போராடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ.வின் தலைவருமான இரா.சம்பந்தன் போன்றோர் தமிழ் -முஸ்லிம் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும், அதிகாரப்பகிர்வில் நீதி மற்றும் சமத்துவம் பேணப்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தைக் காட்டுகின்றனர். அதன் வெளிப்பாடாகவே இணைந்த வடகிழக்கு சுயாட்சியில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்குவோமென எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ.வின் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். அவரின் நல்லெண்ணத்தை வரவேற்கும் அதேநேரம், நீடித்த சமாதானமான சகவாழ்வுக்கு முதலமைச்சர் பதவி தீர்வாகாதென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும், தமிழ் மக்களின் சொத்துகளை முஸ்லிம்கள் சூறையாடியதாகவோ, ஒடுக்கியதாகவோ எவரும் கூறமுடியாது. ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களின் காலத்தில்; வடகிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த அடக்குமுறைகள், அநீதிகள், இழப்புகள்; எண்ணிலடங்காதவை என்பதை மறைத்துப் பேசுவது ஏனென்று கேட்க விரும்புகிறேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
1 hours ago