2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தென்கிழக்குப் பல்கலை பாரிய சேவையாற்றுகின்றது'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 11 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரபின் எண்ணக்கருவில் உருவான  தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தற்பொழுது தேசிய பல்லைக்கழகங்கள் 17 உடன் சேர்ந்து உயர் கல்வித்துறையில் பாரிய சேவையைச் செய்து வருகின்றதென பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்தார்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக  கல்கிசையில் கல்விசார் மற்றும் கற்கை நிலையம் மீள நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கும் வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்பொழுது  ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டதாரிகளை அனுமதி வழங்கும்போது 10 சதவீதமாக அதிகரித்தால்;  2020ஆம் ஆண்டாகும்போது, இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழகங்களும் 35 ஆயிரம் மாணவர்களை அதிகரிக்க முடியும்.

ஒரு வருடத்தில் 120  மாணவர்களை அதிகரித்தல் வேண்டும்.  ஆனால், எமது நாட்டில் உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் எழுதிவிட்டு பல்கலைக்கழகம் செல்லும்வரை மாணவர்கள் ஒன்றரை வருடம் காலத்தினை வீணடிக்கின்றார்கள். இதனால் தனியார் பல்கலைக்கழகங்கள் இம்மாணவர்களை கவர்ந்து குறைந்த காலத்தில் பட்டப்படிப்பினைத் தொடர அனுமதிக்கின்றனர்.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அண்மையில் பல்கலைக்கழக கல்வியலாளர்களின் பேச்சுவார்த்தை நடாத்திய முடிவு வெளியானதும் நவம்பர் மாதத்தில் கல்வியை தொடரக்கூடிய வசதிகளை செய்து வருகின்றோம்.
அத்துடன், பல்கலைக்கழககங்களினது தரமான கல்வியை பரீசீலிப்பதற்கு வெளிநாட்டு கல்வியாளர்களினால்; திட்டம் வகுக்கப்படுகின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X