2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

துப்பாக்கி சூட்டில் யானை பலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணல்சேனை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை 35-40க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று,திருக்கோவில் மற்றும் பொத்துவில் வன ஜீவராசிகள் அலுவலகத்துக்கு பொறுப்பான அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

பொத்துவில் கோமாரி மணல்சேனை காட்டுப் பகுதியில் காட்டு யானை ஒன்று மரணித்து கிடப்பதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு  சென்ற அக்கரைப்பற்று,திருக்கோவில் மற்றும் பொத்துவில் வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குறித்த யானை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  இரண்டு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனை அடுத்து அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவக் குழுவினர் வருகை தந்து யானையின் மரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட போது கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக இந்த யானையின் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக இரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்பட்டு நோய்வாய்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இம்மாதம் 18ஆம் திகதி வரை 9 காட்டு யானைகள் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று,திருக்கோவில் மற்றும் பொத்துவில் வன ஜீவராசிகள் அலுவலக பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X