2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துப்பாகி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

Kogilavani   / 2016 மே 03 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா  சரவணன்,எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் வம்மியடி பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் சிவகுரு உதயகுமார் என்ற 35 வயது நபர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் கூறினர்.

திங்கட்கிழமை(2) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் விநாயகபுரம் சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

சாகாமம் வம்மியடி காட்டுப் பகுதிக்கு 4 பேர்; கொண்ட குழுவினர்; சம்பவ தினம் இரவு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட உள்ளுர் துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்றுள்ளனர்.  இதன்போது  துப்பாக்கி வெடித்துள்ளதாகவும் இதில் படுகாயமடைந்த மேற்படி நபர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டப் போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X