2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'திவிநெகும பயனாளிகள் வருமானத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பி.எம்.எம்.காதர்

திவிநெகும பயனாளிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்திராமல் பொறுப்புணர்ச்சியுடனும் அக்கறையுடனும் செயற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதமுனை,நற்பிட்டிமுனை கிராமங்களில் திவிநெகும உதவி பெறும் 19 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு இன்று(15)மருதமுனை திவிநெகும வங்கியில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திவிநெகும உதவி பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கோடும்,சுயதொழிலை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையிலுமே இந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே,திவிநெகும பயனாளிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்திராமல் பொறுப்புணர்ச்சியுடனும் அக்கறையுடனும் செயற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வதோடு வறுமை நிலையில் இருந்து  விடுபட முயற்சிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X